ஜாமிஆ தையிபா மகளிர் அறபுக் கல்லூரி
கம்பளை:
இயற்கை எழில் கொஞ்சும் அழகான இலங்கையின் ஒரு அழகான நகரம் கம்பளை நகரமாகும். ஓவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கான வெயிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கடந்து செல்லும் இந்நகரம்; நுவரெலியா வீதியில் சுகந்தமான காலநிலைகளுடன் அமைந்துள்ளது. கம்பளை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 567 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 3000-3500 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
கம்பளை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரசபை ஆகும். கம்பளை நகரச் சூழவுள்ள கிராமிய மற்றும் தோட்டப்புறப் பகுதிகள் உடாபலாத்தை பிரதேச சபையால் ஆட்சி செய்யப்படுகிறது. நகரசபை மற்றும் பிரதேசபை என்பன கூட்டாக உடாபலாத்தை பிரதேச செயலர் நிர்வாகப் பிரிவில் அடங்குகின்றன. இது மாவட்டத் தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து தெற்குத் திசையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இலங்கையின் நீளமான ஆறான மகாவலி கங்கை இந்நகரின் உடாகப் பாய்கிறது. இலங்கையின் பண்டைய இராசதானிகளில் ஒன்றான கம்பளை இராசதானி இந்நகரை மையமாகக் கொண்டே அமைக்கப்பட்டிருந்தது.
கம்பளை முஸ்லிம்கள்:
இலங்கை வரலாற்றில் கம்பளை முஸ்லிம்கள் மிக அதிகமாக ஞாபகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பல சவால்களை முன்னோக்கி செயற்பட்டதானது பற்பல வரலாறு நிகழ்வுகளை ஏற்படுத்தியுள்ளன. மஸ்ஜிதுக்கு முன்னால் பெரஹராக்கள் செல்லும் போது அதன் சத்தங்கள் பள்ளிவாசலுக்குள்ளே கேட்கக் கூடாது என போராடியவர்கள் கம்பளை முஸ்லிம்கள். ஆதனால் நாடு முழுவதும் ஒரு அசாதாரண சூழ்நிலையும் ஏற்பட்டது. இன்று அது சகிப்புத் தன்மையற்ற பிழையான நடவடிக்கை என நாம் விளங்கினாலும் எமது உரிமைகள், தனித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
இத்தொடரில் நல்ல பல கல்வி நிலையங்களும், பாடசாலைகளும் இங்கு உருவாகின. இதற்கு கம்பளை ஸாஹிராக் கல்லூரி ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். இங்கிருந்து நாட்டின் நாலா புரங்களிலிருந்தும் வந்து கல்வி கற்றுச் சென்றுள்ளனர். நாட்டுக்கு பணியாற்றுகின்ற அல்லாது பணியாற்றிய பலர் இங்கு கல்வி கற்றவர்களும் இருக்கின்றனர்.
ஜாமிஆவின் தோற்றம்:
வியாபாரம், கல்வி, கலை கலாசாரம் போன்ற துறைகள் போலவே முஸ்லிம்கள் ஆன்மீகத்திலும் முன்னேற பல வழிகள் இருந்து வந்திருக்கின்றன. தரீகாக்களின் ஷேக்மார்களின் வருகை, ஸாவியாக்களில் திக்ர் மஸ்லிஸ்கள், இந்தியாவின் ஆலிம்கள் வந்து பயான் ஹதீஸ் உபன்னியாசங்கள் என அந்தக் கால்ததிற்கு ஏற்றவாறு பல பணிகள் நடைபெற்று வந்தன. அண்மை காலங்கள் வரை அதன் பிரதிபலிப்புக்களை எம்மால் உணர முடிந்தன.
ஆன்மீகத் துறையில் முன்னேற்றம் கண்ட முஸ்லிம்கள் பெண்கள் கல்வி, பெண்கள் ஆன்மீகத் துறை முன்னேற்றம் பற்றி பெரியளவில் சிந்திக்க வில்லை என்பது உண்மை. ஸஹாபிய்யா பெண்மனிகளும் ஆன்மீகத்துடனான கல்வி மேதைகளாக இருந்ததை உணர முடியாமால் போனது. இதன் பின்னணியே ஜாமிஆ தையிபாவின் தோற்றமாகும். சுமார் பல்லாண்டு காலமாக சில ஆலிம்கள் இது பற்றி சிந்தித்து எவ்வித அடி;பபடை வசதிகளும் இல்லாமல் வாடகைக்கு ஒரு பெரிய வீடு பெறப்பட்டு அல்லாஹ்வை மாத்திரம் நம்பி சென்ற 20.04.2017 வியாழக்கிழமை அஸர் தொழுகையுடன் ஆரம்பமானது. 'அல்ஹம்து லில்லாஹ்'
ஜாமிஆவின் ஸ்தாகர்கள்:
அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அல்-ஹலீமி
அஷ்-ஷைக் எம்.புவாஜி முஹ்யதீன் அல்-ஹுஸைனி
அஷ்-ஷைக் எம்.இர்பாத் இமாம்தீன் அல்-மழாஹிரி
அஷ்-ஷைக் அப்துல் அஸீஸ்
இதன் ஆரம்பத்திலேயே அனுபவமுள்ள மூத்த, தஃவாத் துறையோடு ஈடுபாடுள்ளவர்களின் கண்கானிப்பிலும், ஆலோசனைகளுடனும் ஜாமிஆ நடைபெற வேண்டுமென்ற நோக்கத்தோடு கீழ்வரும் அங்கத்தவர்கள் ஜாமிஆவின் ஷுராவில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
ஜாமிஆவின் ஷுரா அங்கத்தவர்கள்:
அல்-ஹாஜ் எம்.தாஹிர்;
அல்-ஹாஜ் டீ.ஹாஜா மொஹிதீன்
அல்-ஹாஜ் எம்.மன்ஸுர்
அல்-ஹாஜ் எம்.உவைஸ்
அல்-ஹாஜ் எம்.சித்தீக்
அல்-ஹாஜ் எம்.றயீஸ்
அல்-ஹாஸ் எம்.றமீஸ்
ஜாமிஆவின் நோக்கம்:
சகல தரத்திலுமுள்ள பெண்மணிகளும் எச்சந்தர்ப்பத்திலும் இஸ்லாமிய வழிகாட்டலின் அடிப்படையில் தமது வாழ்வை அமைத்துக்கொள்ளவும் வளர்ந்து வருகின்ற இளம் பிராய யுவதிகள் ஆன்மீகத் துறையிலும், லௌகீகத் துறையிலும் கல்வி கற்று, அறிவுள்ள தக்வாவுள்ள பெண்கள் சமூகமொன்றை நிறுவுதல்.
பாடத்திட்டம்
மாணவிகளுக்கான பாடநெறிகள்:
கற்கைநெறி
• முழு நேர அல்-ஆலிமா கற்கைநெறி
• முழு நேர அல்-ஹாபிழா கற்கைநெறி
• ஆல்-ஆலிம் பரீட்சைக்குத் தயார்படுத்தல்
அல்-ஆலிமா கற்கைநெறியை பூர்த்தி செய்தோருக்கான ஒரு வருட (வுசயiniபெ) பாடநெறிகள்:
• பல்கலைக்கழகத்திற்குத் தயார்படுத்தல் (கலை, கணிதம், விஞ்ஞானம்)
• பாமசி கற்கைநெறி
• தையல்
• மனையியல்
• கணிணி
• மொழித் திறன் - விஷேட கற்கைநெறி
• தஃவா பயிற்சிநெறி
• குறுகிய கால விஷேட வதிவிட கற்கைநெறி 17-20 04 மாதங்கள்
• திருமணத்திற் தயார்படுத்தல் (Pசந ஆயசசயைபந)
• ஆளுமை விருத்தி
• மனையியல் நவஉ
• பல்கலைக்கழகத்திற்குத் தயார்படுத்தல் - 02 வருடங்கள்
• மானவிகளை பரீட்சைக்குத் தயார்படுத்தலும், விஷேட வகுப்புக்களும்
(ஊர் மாணவிகளுக்கு மட்டும்)
மௌலவியாக்களுக்கான பயிற்சிப் பாடநெறிகள்:
• கற்பித்தல் பயிற்சி முறைகள் - குறுகிய கால கற்கைநெறி
• ஆளுமை விருத்தி - குறுகிய கால கற்கைநெறி
• தத்ரீபுத் தஃவா – தஃவா பயிற்சி முறைகள் - குறுகிய கால கற்கைநெறி
• மொழித் திறனும், கணணியும் - குறுகிய கால கற்கைநெறி
ஆசிரியைகளுக்கான வழிகாட்டல் கருத்தரங்குகள்:
• இஸ்லாமிய கற்பித்தல் முறைகள் - செயலமர்வுகள்;
• இஸ்லாத்தில் சிறுவர் உரிமையும், கடமையும் - செயலமர்வுகள்;
தாய்மார்களுக்கான பாடநெறிகள்:
• ஷரீஆ பாடநெறி - வாராந்த வகுப்புகள் 2 வருடங்கள்
• குழந்தை வளர்ப்பும், உளவியலும் - செயலமர்வுகள்;
• நல்ல மனைவி நல்ல வாழ்வு (Good Wife Good Life)
No comments:
Post a Comment